‘சுழல்’ தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் – காயத்ரி
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் -தி வோர்டெக்ஸ்' தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் - காயத்ரி
அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும் தொடர் குறித்த விமர்சனங்களையும் வெளியிட்டதற்காக இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகள் புஷ்கர்- காயத்ரி தம்பதியினர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
புஷ்கர் மற்றும் காயத்ரியின் இலட்சிய படைப்பாக உருவானது தான் 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எனும் தொடர். இந்த தொடர் கண்ணைக் கவரும் காட்சிகளுக்காகவும், பரபரப்பான திரைக்கதைக்காகவும், வித்தியாசமான...
