தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் யாஷின் தாய் புஷ்பா அருண்குமார்!
இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு: தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் யாஷ்-ன் தாய் புஷ்பா அருண்குமார்!
ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு "கொத்தாலவாடி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மனைவி பரவதம்மா ராஜ்குமார் போன்று புஷ்பா அருண்குமார் இளம் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கன்னட திரையுலகில் பயணத்தை தொடங்கியுள்ள பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
...
