“ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் !
உள்ளங்களை கொள்ளை கொண்டு, அனைத்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த “ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. IMDB உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின் பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம். அந்த இணையதளத்தில் இத்தனை வருடங்கள் வெளியான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களில் No 1 படமாகவும், இந்திய திரைப்படங்களில் No 3 திரைப்படமாகவும் இடம்பெற்றிருக்கிறது “ராட்சசன்” திரைப்படம்.
இது குறித்து Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது...
இது எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் மரியாதை ஆகும். இந்த வரவேற்பும், இத்தனை பெரிய வெற்றியும் இப்படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் உரித்தானது. 3 வருடங்களுக்கு முன்னதாக நிறைய கனவுகளுடன், சினிமாவின் மீது பெரும் காதலுடனும், நிற...
