‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாராசாமியின் கதாபாத்திர போஸ்டர்!
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் பான் இந்திய படமான ‘அஜாக்ரதா’வில் ராதிகா குமாராசாமியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!
பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி, கர்நாடாகவிலேயே சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம் என பெயரெடுத்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் சசிதர் மிக பிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளார். அதற்கேற்றபடி மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக ராதிகாவின் கதாபாத்திர போஸ்டரை ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிகுந்த ஆ...

