ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் “தர்பார்”
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கு “தர்பார்” என பெயர் வைத்துள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி முதன்முதலாக இணையும் படம் இது. இந்த “தர்பார்“ படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘2.0’ எனும் பிரமாண்ட படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்௸ன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 2.0 படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியோடு லைகா நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது.
பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கபடும் நயன்தாரா நடிக்கும் புதிய படம் இது . சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நயன்தாரா மூன்று படங்களில் நடித்து 11 வர...
