Tuesday, September 1

Tag: rajini durbar in usa

அமெரிக்காவில் ‘தர்பார்’ பிரிமீயர் ஷோ!

அமெரிக்காவில் ‘தர்பார்’ பிரிமீயர் ஷோ!

News
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவர் திரு. கல் ராமன், தலைமை டிஜிட்டல் அதிகாரி, சாம்சுங் அமெரிக்கா. இவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மதிநுட்பமான தொழிலதிபர். வருகின்ற ஜனவர...