துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’!
பத்மாவத், அந்தாதுன், பாக் மில்கா பாக் போன்ற மிகப்பெரிய மற்றும் கதையம்சம் கொண்ட படங்கள் மூலம் இந்திய சினிமாவை மறுவரையறை செய்த இந்தியாவின் பிரீமியர் கண்டெண்ட் ஸ்டுடியோ வையாகாம் 18 ஸ்டுடியோஸ், தேவதாசா (தெலுங்கு) மற்றும் கோடத்தி சமக்ஷம் பாலன் வகீல் (மலையாளம்) ஆகிய சினிமாக்கள் மூலம் பிராந்திய மொழி சினிமாவில் அடியெடுத்து வைத்தது. இப்போது வையாகாம் 18 மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் தமிழ் சினிமாவில் தங்களின் வருகையை அறிவிக்கிறது.
வையாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது, “ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளை தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்திகரமான எதுவும் இல்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கப்படும் கதைகளை கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்ட...

