குழந்தைகளை குதூகலப்படுத்த வருகிறது தும்மா!
அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு வந்திருந்த புலி தும்பா வேண்டுமானால் அழையா விருந்தாளியாக இருந்திருக்கலாம் (விளம்பர வீடியோவில்), ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பமும், அதில் இருக்கும் குழந்தைகளும் புலி தும்பாவின் ராஜாங்கத்துக்குள் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த கோடையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் படமாக தும்பா இருக்கிறது. மிக குறுகிய காலத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறும்போது, "தயாரிப்பாளர்களான நாங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர ஆர்வத்தை பகிர்ந்து கொள்வது என்பது யதேச்சையாக அமைந்தது. இருவருமே பயணக்கதை மற்றும் சாகச அடிப்படையிலான திரைப்படங்களை, குறிப்பாக காடுகளின் பின்னணியில் உருவாகும...
