முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தால் சிறப்பு பெறும் ஜீவி திரைப்படம்!
ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. "8 தோட்டாக்கள்" படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார்.
அவர் கூறும்போத...
