RAMBO: LAST BLOOD –
1972 ஆம் ஆண்டு John Morrel என்பவர் எழுதிய நாவலான First Blood ஐ தழுவி 1982 ஆம் ஆண்டு அதே பெயரில் First Blood படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்குகொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் John Rambo என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு.
வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்ற அந்த படத்தை தொடர்ந்து மேலும் மூன்று படங்கள் வெளியாகின. அவை -முறையே -Rambo :First Blood Part 2 (1985 ), Rambo 3 (1988 ) மற்றும் Rambo (2008 ) ஆகியன அனைத்து படங்களுமே வசூலில் சாதனை புரிந்தன என்கிறபோதிலும் இரண்டாவது தொடர் படம் மட்டுமே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து பெரிய சாதனையை உருவாக்கியது!
இதுவரை வெளிவந்த 4 தொடர் படங்களின் மொத்த வசூல் 727 மில்லியன...
