“வெல்கம் டு பிராப்ளம்” – இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker
"வெல்கம் டு பிராப்ளம்" - இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker
தெனாலி படம் பார்த்திருப்பீர்கள். எதைப் பார்த்தாலும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார் கமல். நம்மில் பலரும் அப்படித்தான். குறிப்பாக, பிரச்சனைகளைப் பார்த்து அதிகம் பயப்படுகிற குணம் நமக்கு உண்டு, எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பிரச்சனைகள் வருகின்றன? இந்த ஆண்டவன் கருணை இல்லாதவன்? எவ்வளவு பேருக்கு நான் உதவி இருக்கிறேன்?. எனக்கு ஒரு பிரச்சனை என்கிறபோது, உதவ யாரும் துணை நிற்கவில்லை? என இப்படியெல்லாம் நம்மில் பலர் வெவ்வேறு தருணங்களில் புலம்பியிருக்கிறோம்.
வெற்றியாளர்கள் பிரச்சனைகளைக் கண்டு பயப்படுவதில்லை. பயந்து ஒளிவதற்கு பதிலாக அவற்றை தைரியத்துடன் எதிர்கொள்கிரார்கள். இன்னும் சொல்லப்போனால், வாழ்வில் உயர, உயர பிரச்சனைகளை எதிர்கொள்வது மட்டுமே அவர்களது அன்றாட நிகழ்வாக இருக்கும். கே. பாலச்சந்தர் இயக்கிய ஒரு வீடு இர...
