“நவரசா” ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை ரம்யா நம்பீசன்!
"நவரசா" ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன்
பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் - நடிகை ரம்யா நம்பீசன் !
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். விரைவில் வெளியாகவிருக்கும் "நவரசா" ஆந்தாலஜி படத்தில், லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். மனிதனின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களை மையமாக கொண்டு, தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.
இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும், இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது குறித்தும், நடிகை ரம்யா நம்பீசன் பகிந்துகொண்டதாவது...
எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, படை...


