பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு!
பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் 'ரணகளம்' பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த 'தாதா 87' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை அவர் பெற்றார். தாதா 87 வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி தான் தற்போது 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' (PUBG) படத்தையும் இயக்குகிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
பப்ஜி படத்திற்கு இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே தாதா 87 படத்தில் இவரது இசையில் 'ஆறடி ஆண்டவன்' பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.
தற்போது P...
