ஜப்பானில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் ‘ரங்கஸ்தலம்’!
ராம் சரணின் 'ரங்கஸ்தலம்' ஜப்பான் வெளியிட்டின் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இப்படம் முதல் நாளில் 70 திரைகளில் வெளியிடப்பட்டு 2.5 மில்லியன் யென்( ஜப்பான் நாணயம்) னை வசூலித்தது!
'ரங்கஸ்தலம்' படத்தை ஜப்பானின் வெளியிட்ட அதன் விநியோகஸ்தரான ஸ்பேஸ்பாக்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி துரைப்பாண்டியன் டோக்கியோவிலிருந்து 'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றி குறித்து பேசுகிறார். (அதன் காணொளி உள்ளே..)
''ஜப்பானிய மக்களின் இதயத்தில் ராம் சரண் தனி இடத்தை பிடித்துள்ளார். ரங்கஸ்தலம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் இதற்கு உண்மையான சாட்சி.
அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றான 'ரங்கஸ்தலம்'- அதன் நடிப்பு, கதை சொல்லல், இயக்கம் மற்றும் இசை ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது. இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அனைத்து காலகட்டத்திலும் அதிக வசூலை செய்த ...
