புலியை மையமாகக் கொண்டு உருவான ‘ரேஞ்சர்’ திரைப்படம்!
தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளரின் இயக்குநர் என்று பெயர் வாங்கியவர் இயக்குநர் தரணிதரன். தரணிதரன் சரியாகத் திட்டமிட்டு மிகக் குறுக்கிய நாட்களில் படப்பிடிப்பை முடிப்பார் என்று தயாரிப்பாளரின் மத்தியில் நற்பெயர் பெற்றவர்.
சத்யராஜ் மற்றும் சிபிராஜ் வைத்து இவர் இயக்கிய 'ஜாக்சன் துரை' அனைத்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் பெற்று கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றவர். தமிழ் ரசிகர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ‘ஜாக்சன் துரை’ குடும்ப ரசிகர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல், அதைத் தயாரித்த நிறுவனம் மற்றும் அதை வெளியிட்ட நிறுவனத்துக்கும் நல்ல லாபத்தைப் பெற்றுத் தந்தது. அதே வேளையில் தரணிதரன் ‘பர்மா’ மற்றும் ‘ராஜா ரங்குஸ்கி’ போன்ற தரமான படங்களை சிறிய முதலீட்டில் எடுத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்து கொடுத...
