எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!
ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!
விருதுகள், பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்கள் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கு புதிதல்ல. இவற்றுக்கு மகுடம் வைக்கும் அளவிலும் நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் சர்வதேச புகழ் பெற்ற எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
போலந்தில் நடைபெறும் இவ்விழாவின் 31வது பதிப்பில் ரவி கே சந்திரன் ஜூரியாக பங்காற்றுவார்.
நாற்பது வருடங்களாக ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ள ரவி கே சந்திரன், 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'பிளாக்', 'மை நேம் இஸ் கான்' உள்ளிட்ட பல மாபெரும் வெற்றி பெற்ற மற்றும் விருதுகளை குவித்த பன்மொழி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார்.
“கேமரிமேஜ்“ என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். ஒ...
