வெற்றி நடிக்கும் ‘ரெட் சேன்டில்’ படத்தின் டப்பிங் துவக்கம்!
தீபாவளி திருநாளில் நடிகர் வெற்றி நடிக்கும் 'ரெட் சேன்டில்' படத்தின் டப்பிங் துவங்கியது.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிவந்த 'ஜெய்பீம்' வெற்றி அடைந்துள்ள நிலையில் வட மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக 'ரெட் சேன்டில்’ வெளிவரவுள்ளது.
இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார்.
வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், 'கர்ணன்' ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் குறித்து இயக்குநர் குருராமானுஜம் கூ...
