‘நெற்றிக்கண்’ ரீமேக் குறித்த கவிதாலயா வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கை
கவிதாலயாவின் ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை
கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில்
திரைப்படத்தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ் திரையுலக
ஜாம்பவான் கே பாலச்சந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக்
காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால்,
ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை. மேலும், கவிதாலயா
எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த
மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.
இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய
தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ...
