ரெட்ரோ_ விமர்சனம்
ரெட்ரோ_ விமர்சனம்
தாய் தந்தையை இழந்த சூர்யாவை சிறுவயதிலிருந்தே வளர்த்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ்.
குழந்தைப் பருவத்திலிருந்தே சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல், சிரிக்கத் தெரியாதவனாக வளர்ந்து வாலிபன் ஆகிறார் சூர்யா.
தாதாவாக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ் தனது அடியாட்களில் ஒருவராகவே சூர்யாவை கருதுகிறார்.
தான் காதலிக்கும் பூஜா ஹெக்டேவை திருமணம் செய்ய முடிவெடுக்கும் சூர்யா, அதன் பிறகு அடிதடி சண்டைகளை விட்டொழிக்க நினைக்கிறார்.
ஆனால் சூர்யாவின் திருமண தினத்தன்று தங்கமீன் தொடர்பான பிரச்சனையில் ஜோஜூ ஜார்ஜுக்கும் சூர்யாவிற்கும் மோதல் வெடிக்கிறது.
இந்த மோதலில் ஜோஜூ ஜார்ஜின் கையை வெட்டி விடுகிறார் சூர்யா. திருமணம் தடைபட, சிறைக்குச் செல்ல நேரிடுகிறது சூர்யா.
சில வருடங்களுக்குப் பிறகு பூஜா ஹெக்டே அந்தமானில் இருப்பது தெரியவர, ்ஒரு கடத்தல் கும்பலின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பி அந்தமான் செ...
