ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் ’சாரி’
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் படம் வரும் 4 ஆம் தேதி வெளியாகிறது!
கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ள, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’சாரி’ திரைப்படத்தில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்திரல் நடைபெற்றது. இந்தப் படத்தை ரவிசங்கர் வர்மா, RGV - AARVI புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் தயாரித்துள்ளார். ’சாரி’ திரைப்படம் இந்த மாதம் 4 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் படம் பற்றி கூறியதாவது, "'சாரி' படத்திற்காக திறமையான புதிய குழு பணியாற்றியுள்ளது. ராம் கோபால் வர்மா எனக்கு படம் எப்படி உருவாக்குவது என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்...
