Tag: Ritika Singh
‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!
நகைச்சுவை கலந்த காதல் சித்திரமான 'ஓ மை கடவுளே' தென்றல் காற்றைப்போல் மனதுக்கு இதமான அனுபவத்தைத் தரத் தயாராகிறது. அசோக் செல்வன் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெகுஜன ரசனைக்கேற்ப அமைந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது.
ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் டில்லிபாபு இது பற்றி கூறுகையில்
"ஓ மை கடவுளே படத்தில் பங்கு பெற்ற துடிப்பு மிக்க இளைஞர் குழு துவக்கத்திலிருந்தே என்னை திருப்திபடுத்தத் தவறவில்லை. இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும், அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் நேர்மறையாகவே அமைந்திருக்கின்றன.
ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ...
“ஒ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி!
பெயர் அறிவிக்கப்பட்டதலிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படைப்பாக இருக்கிறது “ஓ மை கடவுளே” படம். அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இது பற்றி கூறியதாவது...
சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாபாத்திரம் என்பேன். அவர் படத்தி வரும் நேரம் படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.
திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிக...


