கொரோனா வைரஸை பகடி செய்த பாலாஜி!
ஒரு பிரபல பொன்மொழி இருக்கிறது “நமது பெருங்கவலைகள் பலதும் நாம் அதிகமாக யோசிப்பதால் உண்டாவது” என்று. நமது தற்போதைய அச்சகரமான சூழ்நிலை இதை அப்பட்டமாய் நிரூபிக்கிறது. இணைய ரேடியோவில் Jiosaavn நிறுவனத்தின் RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice நிகழ்ச்சியில் (Run away) “தெறித்து ஓடு” எனும் தலைப்பில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பற்றி கலப்பாக பேசியிருக்கிறார். இந்த கொரோனா வைரஸை பற்றியே எல்லோரும் பேசி வரும் நிலையில் அச்சமும் சூழ்ந்து வர, அதனை விட பெரும் பகடியாய் வெறொன்று மாறியுள்ளது. எல் கே ஜி படத்தில் ஒரு காட்சியில் “ஓடு வைரஸே” என வைரஸ்க்கு எதிராக போராடும் காட்சி வரும். நாஸ்டடார்மஸ் முன்கணிப்பு போல் அது தற்போது உண்மையாகியுள்ளது. சில இளைஞர்கள் பட்டாளம் “ஓடு கொரோனா ஓடு” என ஓங்கி சத்தம் போட்டு போராடி வரும் காமெடி நிகழ்ந்துள்ளது. இதனை அப்படியே தன் நிக...
