ஒன்பது ரஜினிக்கு சம்மான நடிகர் RK சுரேஷ்!
“ஆர்.கே.சுரேஷ் ஒன்பது ரஜினிக்கு சமம்”
‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.வி.உதயகுமார் கிளப்பிய பரபரப்பு!
காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:-
“ தல, தளபதி படங்களுக்கு இணையாக இப்படத்தின் இசை வெளிய...







