முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்’(ROBOCHEF)!
ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அந்த அறை, பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள். அவர்கள் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறிகளை வெட்டும் கருவி, இன்டக்ஷன் ஸ்டவ் என தனித்தனியாக கருவிகளைக் கண்டுபிடித்து பெண்களுக்கு உதவி செய்தாலும், அவர்கள் சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முடிவதில்லை.
வீட்டுச் சாப்பிட்டிற்காக ஏங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவை, நாம் எதி...
