கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்”!
நடிகர் R.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பிரத்யேகமாக திரையிடப்படுகிறது !
ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை கண்டுகளிக்கும் நேரம் இறுதியாக வந்துவிட்டது: உலக சினிமா வரலாற்றில் இந்தியாவை பெருமை கொள்ள வைக்கும் நிகழ்வு அரங்கேறவுள்ளது. புகழ்பெற்ற இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை சர்வதேச அரங்கில் எடுத்துரைக்கும் அருமையான படைப்பு. நடிகர் R மாதவன் இயக்குநராக அறிமுகமாகும், வாழ்க்கை வரலாற்று டிராமா திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’, 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில், உலக அரங்கேற்றத்தைப் பெறவுள்ளது. மே 19 வியாழன் அன்று இரவு 9 மணிக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டின் போது, இந்த ஆண்டு கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியாவை அதிகாரப்பூர்வ நாடாகக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக நடைபெறும் ‘பாலைஸ் டெஸ்...


