ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை மாலாஸ்ரீயின் மகள்!
மறைந்த பிரபல கன்னட தயாரிப்பாளர் ராமு மற்றும் பிரபல சீனியர் நடிகை மாலாஸ்ரீ ஆகியோரின் மகள் ராதனா ராம் முதன்முதலாக கன்னட திரையுலகின் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன் ஜோடியாக ‘D56’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூரில் உள்ள ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆசிரமத்தில் வரலட்சுமி பண்டிகை நன்னாளில் நேற்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கேமராவை சுவிட்ச் ஆன் செய்து இந்த படத்தின் முதல் ஷாட்டை துவங்கி வைத்தார். ராக்லைன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். ராபர்ட் பட புகழ் தருண் சுதிர் இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.
இந்த நிகழ்வின்போது பேசிய சீனியர் நடிகை மாலாஸ்ரீ, “கன்னட திரை உலகில் முதன் முதலாக அறிமுகமாகும் எனது மகள் ர...
