டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி!
டிஸ்னி+ ஹாஸ்டார் - ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்காக, தனித்துவமான விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!!
சென்னை (அக்டோபர் 19, 2022): சென்னையில் நடக்கவுள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எல்லா திசையிலும் அதன் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் ராக்ஸ்டார் அனிருத்தின் பல்வேறு விதமான படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரயிலின் வெளியில் மட்டுமல்லாமல், ரயிலுக்குள் ந...
