ரூபன்’ – விமர்சனம்
‘ரூபன்’ – விமர்சனம்
அடர்ந்த வனத்தை ஒட்டிய, சின்ன கிராமம். காட்டுப்பகுதியில் கிடைக்கும் தேனை எடுத்து விற்பதுதான் பலருக்கும் பிழைப்பு.
இந்த கிராமத்தில் வசிக்கின்றனர் தம்பதியரான நாயகன் விஜய் பிரசாத் - நாயகியான காயத்ரி ரெமா.
இருவருக்கும் நீண்ட காலமக குழந்தை பாக்கியம் இல்லை. இவர்களை ஊர் மக்களில் பலர் கிண்டல் செய்வதோடு ஒதுக்கியும் வைக்கின்றனர்.
ஒரு முறை நாயகன் விஜய் பிரசாத், காட்டுக்கு தேன் எடுக்கச் செல்கிறார். அப்போது நடுக்காட்டில் பச்சிளம் குழந்தை ஒன்று அழுதபடி கிடக்கிறது.
குழந்தையின் பெற்றோரைத் தேடியும் கிடைக்காததால், குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். அவரும் மனைவியும் குழந்தையை பாசத்தோடு வளர்க்கின்றனர்.
இதற்கிடையே, காட்டு விலங்குகளை வேட்டையாடும் வில்லன் கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. அவர்களுக்கு தடையாக எதிர்த்து நிற்கிறார், நாயகன் விஜய் பிரசாத்.
இதனால் ஆத்திரமாகும் வில்ல...
