Friday, October 23

Tag: Rowdy Baby song

500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி

500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி

News
2019ல் யூடியூப் தளத்தை 'பிளாக் ஹோல்' பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் 'ரௌடி பேபி' என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மை தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் 'Bohemian Rapsody', 'A Star is Born' மற்றும் 'Gully boy' போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது 'மாரி 2'வின் 'ரௌடி பேபி' தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மேற்கோள் அல்ல, 'Rowdy Baby Song reaction', 'Rowdy baby Cover' (Instrumental & Vocals), Talking Tom version மற்றும் நிறைய விஷயங்களை இணையத்தில் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 'Song reaction' பற்றி குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ளவர்களை பற்றியது மட்டுமல்ல, கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர நாடுகள் வரை...