ஜீ5 தளத்தில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 100 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை!
சென்னை (மே 27, 2022) – இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”, திரைப்படம் மே 20, 2022 முதல் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது, நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
நடிகர் ராம் சரண் கூறும்போது, ஜீ...
