550 அரங்குகளில் திரையிடப்படும் ‘ஆர்ஆர்ஆர்’!
திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில், திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்'-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது!
மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணி...

