“ரன் பேபி ரன்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், மார்ச் 10 முதல் !
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் “ரன் பேபி ரன்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், மார்ச் 10 முதல் !!!
சென்னை (மார்ச் 06, 2023): டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அடுத்த அதிரடி வெளியீடாக, ஒரு சீட் எட்ஜ் திரில்லரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.
நடிகர்கள் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் தமிழ் ஆக்ஷன் திரில்லர் 'ரன் பேபி ரன்' திரைப்படம், மார்ச் 10, 2023 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் உருவான இப்படத்தில், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஜோ மல்லூரி, ஹரீஷ் பெராடி, ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, KPY பாலா, ஜார்ஜ் மரியன், நாகிநீடு முதலிய முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் ஒரு புலனாய்வு திரில்லர...
