Friday, October 23

Tag: S. Xavier Britto

அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் படம்!

அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் படம்!

News
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ வழங்கும், இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம்! தனித்துவமான உள்ளடக்கம் மற்றும் ஸ்டைலான திரையாக்கம் மூலம் படத்தின் தரத்தை உயர்த்துவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வரதன். 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்களின் வெற்றி மூலம் அவரது கிராஃப் சீராக உயர்ந்து வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஷெர்ஷா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்த பிறகு, அவர் இப்போது தனது அடுத்த படத்திற்காக நடிகர் சல்மான் கானுடன் இணைந்துள்ளார். இது அவரின் சினிமா பயணத்தில் அடுத்த மைல்கல். இப்போது, ​​விஷ்ணு வரதன் மனதைக் கவரும் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார். திரையில் தனது ஹீரோக்களின் வசீகரத்தை மேம்படுத்துவதில் விஷ்ணு வரதன் பெயர் பெற்றவர். அந்த மேஜிக்கை ...
விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

News
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் தயாரிக்க இருக்கிறார் எஸ். சேவியர் பிரிட்டோ. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது... "நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி விஜய் அவர்களின் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் #தளபதி 64 (தற்காலிக தலைப்பு) விரைவில் எங்களின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் (XB Film Creators) மூலம் தயாரிக்க உள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நம்பிக்கைக்குரிய இளம் திறமைசாலியான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் #தளபதி 64 படத்தை இயக்கவிருக்கிறார். இவர் 'மாநகரம்' மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கியவர். 'கத்தி' படத்தி...