சாதனா சர்கம் பாடிய ஷீரடி சாய்பாபா பாடல்!
இசை நிறுவனம் தொடங்கியுள்ள சுந்தர் சி-19 தயாரிப்பாளர்
சாதனா சர்கம் பாடிய முதல் பாடல் வெளியீடு
சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் 19-வது திரைப்படத்தை தயாரிக்கும் வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி, வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளது.
ஷீரடி சாய்பாபா மீதான இந்த பாடலை பிரபல பாடகி சாதனா சர்கம் பாடியுள்ளார். ஜெகனின் வரிகளுக்கு விக்னேஷ்வர் கல்யாணராமன் பக்தி மணம் கமழ இசை அமைத்துள்ளார். இந்தி பதிப்பின் பாடல்வரிகளை ரிஷிகேஷ் பாதக் இயற்றியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சேவைகள், கட்டுமானம், மின்னணு மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே தடம் பதித்துள்ள வி ஆர் டெல்லா, வி ஆர் மணிகண்டராமன் ராமபத்ரன் தலைமையில் இயங்கி வருகிறது.
புதிய இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே வோனி மியூசிக் தொடங்கியிருப்பதன் நோக்கம் என்று அவர் கூற...
