Friday, September 25

Tag: sakthisoundararajan

அதிக பட்ச தொலைக்காட்சி பார்வையாளர்களைச் சென்றடைந்த சிபி சத்யராஜின் ‘போலீஸ் அவுர் டைகர்’ (நாய்கள் ஜாக்கிரதை இந்தி பதிப்பு)

அதிக பட்ச தொலைக்காட்சி பார்வையாளர்களைச் சென்றடைந்த சிபி சத்யராஜின் ‘போலீஸ் அவுர் டைகர்’ (நாய்கள் ஜாக்கிரதை இந்தி பதிப்பு)

News
சத்யராஜின் சொந்தப் பட நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படம், சிபி சத்யராஜுக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படமாகும். வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற இப்படம் விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் தனித்துவமான வெற்றி, கதைத் தேர்வில் கவனம் செலுத்தும் நடிகர் என்ற பெயரையும் சிபிராஜுக்குப் பெற்றத் தந்தது. இன்றுவரை நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தொடர்ந்து அவர் அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதென்றாலும், குழந்தைகளுக்கும், செல்ல நாய்களை வளர்ப்பவர்களுக்கும் இன்று வரை மனதுக்கு நெருக்கமான படமாகவே இது இருந்து வருகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்கள் பிராந்திய எல்லைகளையும், மொழியின் தடைகளையும் கடந்து புகழப்படும் என்பது மீண்டும் ஒரு முறை இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது. ...