‘சலார்’ படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!
முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, 'சலார்' படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'சலார்'. இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
'சலார்' படத்தைப் பற்றிய புதிய தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக பட குழுவினர், நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை வாய்ப்பாகக் கருதி, அவர் நடித்திருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.
‘ஏராளமான ரசிகர் ப...

