“லேகே பிரபு கா நாம்” பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் சல்மான் கான் – கத்ரீனா கைப் உற்சாகம்!
“லேகே பிரபு கா நாம்” பாடலுக்கு கிடைத்த அன்பான வரவேற்பால் சல்மான் கான் – கத்ரீனா கைப் உற்சாகம்!
பாலிவுட் மெகாஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் சமீபத்தில் ‘டைகர் 3’யிலிருந்து வெளியான ‘லேகே பிரப கா நாம்’ பாடல் உடனடி ஹிட் ஆனதை தொடர்ந்து ரொம்பவே உற்சாகமடைந்துள்ளார்கள். பிரீத்தம் இசையமைப்பில் ஹிந்தியில் அர்ஜித் சிங் மற்றும் நிகிதா காந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி ஆகியோரால் பாடப்பட்ட இந்த பாடல் இணையத்தை அடித்து நொறுக்கியுள்ளது. ரசிகர்கள் இந்தப்பாடலின் இசையையும் சல்மான் கான் மற்றும் கத்ரீனாவின் அதிரவைக்கும் கெமிஸ்ட்ரியையும் புகழ்ந்து வருகிறார்கள்.
சல்மான் கான் கூறும்போது, "இந்தப் பாடலுக்கான வரவேற்பு ரொம்பவே பாசிட்டிவாக இருப்பதுடன் இந்த பண்டிகை சீசனுக்காக ஒரு பார்ட்டி ஆந்தம் பாடலை ரசிகர்கள் எப்படி கண்டு கொண்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச...




