விஜய் யேசுதாஸின் ‘சால்மன்’ 3டி
டால்ஸ் மற்றும் கட்டுமக்கான் படங்களை இயக்கிய ஷலில் கல்லூர் இயக்கும் படம் சல்மான். 3டி படமாக உருவாகியுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் யேசுதாஸ், ஜொனிடா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். தமிழில் வர்தா என்ற பெயரில் வெளியாகிறது.
ஷஜு தாமஸ், ஜோஸ், ஜோய்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை ரூ15 கோடியில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இப்படம் ரொமான்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. கேரளா, துபாய், மலேசியா, ராமோஜி பிலிம்சிட்டி உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
சர்பரரோஸ் தனது மனைவி சமீரா மற்றும் மகள் சீசன் ஆகியோருடன் துபாயில் வசித்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் வருகிறார்கள். இந்த திரைக்கதையில் பார்வையாளர்கள் நாற்காலியில் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு கதையை எடுத...
