சரவெடி நகைச்சுவைப் படமாக உருவாகும் “சலூன்”!
ரெதான் - தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க - காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் "சலூன்"!
'குற்றம் 23', 'தடம்' வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் - தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் 'கொம்புவச்ச சிங்கம்டா'. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா - காமெடியனாக யோகி பாபு நடிப்பில் 'தர்மபிரபு' வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார் இந்தர்குமார்.
'சலூன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா - யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
'சலூன்' பின்னணியில் கடையின் முதலாளியாக சிவா, தொழிலாளியாக யோகி பாபு நடிக்கின்ற...
