Saturday, October 3

Tag: samcs

‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.!

‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.!

News
ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) வெளியாகவுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். படகுழுவினர் அனைவரும் பாராட்டியுள்ளனர். மேலும், டிரைலர் மற்றும் இப்படத்தில் சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் செய்கிறார்கள்....
“இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்துக்காக அனிருத் பாடிய பாடல்…

“இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்துக்காக அனிருத் பாடிய பாடல்…

News
தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உச்சத்தில் இருக்கும் சாதனை சிலரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தான் அனிருத், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு நேரடி உதாரணமாக செயல்படுகிறார். அவர் அனைத்து பாடல்களில் தன்னுடைய தனித்துவத்தால் அனைத்து வயதினரையும் பாடலை கேட்க வைத்து விடுவார். அனைத்து வகைகளிலும் பாடல்களைப் பாடுபவர் என்று அறியப்படும் அனிருத், தமிழ் சினிமாவின் மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல உறவை பேணுவதோடு, அவர்கள்  இசையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடுவது, புதிதாக வரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்துக்காக 'கண்ணம்மா' என்ற ஒரு இனிமையான மெலோடி பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்.    படக்குழுவினர் நாயகனின் காதல் குணாதிசயங்களை ரசிகர்களுக்கு அனிருத்தின் மந்திர குரலில் வெ...