Tag: San Lokesh
இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு
யோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
இப்படத்தில் யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய...
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’!
புதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.
இயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். "என் முதல் படமான "இரவுக்கு ஆயிரம் கண்கள்" ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பா...

