Sunday, October 4

Tag: SanamShetty

ஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி!

ஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி!

News
கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷனம் ஷெட்டி தனது குடியிருப்புக்கு அருகிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார். "நம் மக்களின் குரல்" என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற என்ஜிஓ குழுவும் இணைந்து அன்றாட பிழைப்பாளிகளான திருவான்மியூர் குறவர் இனத்தைச் சார்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முககவசங்களும் ரேசன் பொருட்களும் கொடுத்து உதவி உள்ளனர்....
சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்!

சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்!

News
இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதனால் இந்தியர்கள் பலரும் சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும். டிக்டாக் மற்றும் பப்ஜி ஆப் - களை புறக்கணிக்க வேண்டும். சீன நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி விட்டு இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்....