சங்ககிரி ராஜ்குமாரின் மற்றுமோர் புதுமைப் படைப்பு ‘பயாஸ்கோப்’!
ஆஹா ஃபைண்ட் - புரொடியூசர் பஜார் - சங்ககிரி ராஜ்குமார் கூட்டணியின் 'பயாஸ்கோப்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சத்யராஜ்- சேரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படம் ஜனவரி 3 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு இந்த திரைப்படம் 'ஆஹா ஃபைண்ட்' டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த உண்மை கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டில் புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிர...

