விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!
தமிழ்சினிமாவில் அவ்வப்போது பேராச்சர்யங்கள் நிகழும். அப்படி சினிமாவில் நிகழ்ந்த பேராச்சர்யம் நடிகர் சந்தானம். மிக எளிமையான இடத்தில் இருந்து வந்து கடுமையாக உழைப்பவர்களை சினிமா வலிமையான இடத்தில் வைக்கும். இப்போது சந்தானம் நாயகனாக அப்படியொரு வலிமையான இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருப்பது வெற்று புரோமோஷனும், வெட்டிப் பந்தாவும் இல்லை. உண்மையான மற்றும் மனம் தளராத அவரது உழைப்பு. விஜய் டிவியில் லொள்ளுசபா மூலமாக மக்களின் மனதில் அமர்ந்தவர், செய்யும் வேலையை மிகவும் நேசித்தே செய்தார். அந்த நேசிப்பும் அர்ப்பணிப்பும் தான் அவரை மன்மதன் படம் மூலமாக சினிமாவிற்கு இழுத்து வந்தது. சினிமாவில் தோன்றிய ஒரே நாளில் அவர் காமெடியில் உச்சம் அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தைப் பிடிக்க அவர் பெரிதும் உழைத்தார். தனித்துவமான காமெடியில் தனித்துவ இடத்தைப் பிடித்தார்...
