கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ‘சர்பத்’ திரைப்படம்!
கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ‘சர்பத்’ திரைப்படம்!
உலகளவில் தொலைக்காட்சியில் முதன் முறையாக 2021 ஏப்ரல் 11 அன்று ஒளிபரப்பாகிறது
ஏப்ரல் 11 ஞாயிறன்று மாலை 4.00 மணியளவில் மற்றும் மறுஒளிபரப்பாக அன்று இரவு 7.00 மணிக்கும் உலகளவில் முதன்முறையாக ஒளிபரப்பாகும் ‘சர்பத்’ திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்
சென்னை, 8 ஏப்ரல் 2021: அறிமுக இயக்குனர் பிரபாகரனின் இயக்கத்தில் உருவாகி அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் திரைப்படமான சர்பத் திரைப்படத்தின் நேரடி சேட்டிலைட் ப்ரீமியர் நிகழ்ச்சியை உங்கள் தொலைக்காட்சி திரைகளுக்கு, தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ் கொண்டு வருகிறது. புகழ்பெற்ற நடிகர் கதிர், பிரபல நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் திரைக்கு புதுவரவான ரகசியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். சிறப்பான இந்த நடிகர் பட்டாளம் ம...
