சர்தார் – திரை விமர்சனம்
சர்தார் - திரை விமர்சனம்
திரைப்படம் என்பது பொழுது போக்கு மட்டுமல்ல... சிந்தனையைத் தூண்டும் நல்ல செய்திகளையும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் படத்தை உருவாக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனை முதலில் பாராட்ட வேண்டும்.
வங்கிக் கணக்கில் நடக்கும் மோசடிகளை 'இரும்புத்திரை' வழியாகவும், கல்வி கடைச் சரக்கானதை 'ஹீரோ' படத்தின் மூலமும் வெளிச்சம் போட்டுக் காட்டிய மித்ரன் 'சர்தார்' படத்தில் குடிதண்ணீர் மூலம் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடும் மாஃபியா கும்பல் குறித்த உரத்த சிந்தனையை முன்வைக்கிறார்.
பெட் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதால் வரும் நோய்களையும், அதன் பாதிப்புகளையும் படமாக்கியிருக்கும் காட்சிகளைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது.
சேதத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்ட சர்தாரின் மகன் விஜய் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி, தமிழ் நாட்டின் போலீஸ் முகமாக ஊடகங்களி...
