50 கோடி 100 கோடி வாங்கும் நாயகர்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன்?
நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை " என்று பெயர் வைத்துள்ளனர்
நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது,
"இப்படியொரு அருமையான விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி உதயகுமார், பேரரசு போன்றோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அவர்கள் துறையில் வெற்றிபெற்றவர்கள்.இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ஏன் என்றால் உழைத்து வெற்றிபெற்றவர்கள் எல்லாம் உங்களை வாழ்த்த வந்திருக்கிறார்கள். ஒரு படம் எடுப்பது மிகவும் சிரமமான வேலை. நிறைய ச...
