எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்!
கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட துறைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது சினிமா துறை ஆகும், திரைத்துறை தற்போதுதான் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் , குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்கு புரோடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனிற்கு தேவையான உதவிகளையும் அத்தோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்ய தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாகத இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார். சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் "Fr...
