பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் ‘சத்தியமங்கலா’
*ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யன் இயக்கத்தில் இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் 'சத்தியமங்கலா'*
உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகளை வென்றவருமான ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் அயிரா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் ஷசிரேகா நாயுடு தயாரிக்கின்றனர்.
‘கோலி சோடா’ புகழ் முனிகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் ‘சத்தியமங்கலா’ படத்தில் கதாநாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். தி கிரேட் காளி (WWE உலக சாம்பியன்), பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ ப...
