நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.!
எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற ப...


